ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர்களுடன் சஜித் கலந்துரையாடல்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஆகியோருக்கும் எதிர்க்கட்சித்தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலானது சஜித் விடுத்திருந்த அழைப்பின் பேரில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (21) நடைபெற்றுள்ளது.
இதன்போது, இருவரும் சஜித் பிரேமதாசவை சந்தித்து சமகால அரசியல் சூழ்நிலைகள் சம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர்.
முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயம்
அத்தோடு, கிழக்கு மாகாண மக்களின் பிரச்சினைகள், கோரிக்கைகள், சமகாலத்தில் முஸ்லிங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமூகம் சார்ந்த பிரச்சினைகள் தொடர்பில் எச்.எம்.எம். ஹரீஸ் சஜித் பிரேமதாசவிடம் எடுத்துரைத்திருந்தார்.
மேலும், ரவூப் ஹக்கீம் முஸ்லிம் சமூகம் சார்ந்த பல விடயங்களை வலியுறுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |