உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்த பின் சஜித்தின் சூளுரை

Sajith Premadasa Sri Lanka Electricity Prices
By Rakesh Jan 08, 2024 11:47 AM GMT
Rakesh

Rakesh

தான்தோன்றித்தனமாக மின்சாரக் கட்டணத்தை அதிகரித்து நாட்டு மக்களை வதைக்கும் ரணில் - மொட்டு அரசாங்கத்திற்கு விரைவில் முடிவு கட்டுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சூளுரைத்துள்ளார்.

மின்சாரக் கட்டண அதிகரிப்பின் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், தற்போதுள்ள மின் கட்டணத்தைக் குறைக்குமாறு உத்தரவிட வேண்டும் என்றும் கோரி எதிர்க்கட்சித் தலைவர் உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை இன்று தாக்கல் செய்தார்.

உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்த பின் சஜித்தின் சூளுரை | Sajith Fundamental Rights Violation Petition

சட்டத்தரணி ஷியாமலி அத்துகோரல ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். 

மனுவில் பெயரிடப்பட்டுள்ள பிரதிவாதிகள்

மனுவைத் தாக்கல் செய்த பின்னர், அது தொடர்பில் உயர் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார சபை, மின்சக்தி அமைச்சர், அந்த அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட தரப்பினர் மனுவின் பிரதிவாதிகளாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.

உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவைத் தாக்கல் செய்த பின் சஜித்தின் சூளுரை | Sajith Fundamental Rights Violation Petition

இலங்கை மின்சார சபைக்கு 52 பில்லியன் ரூபா இலாபம் கிடைத்துள்ளது.

எனினும், நியாமற்ற வகையில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் மூலம் 60 இலட்சம் மின்சார பாவனையாளர்களின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது எனத் தீர்ப்பளிக்கக் கோரி இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.