கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி றிம்ஸான் சமாதான நீதவானாக நியமனம்

Sri Lanka Eastern Province Kalmunai
By Aadhithya Jul 07, 2024 02:45 PM GMT
Aadhithya

Aadhithya

அகில இலங்கை சமாதான நீதவானாக  சாய்ந்தமருது (Sainthamaruthu) கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரியும், நீதிக்கான மய்யம் அமைப்பின் ஸ்தாபக பிரதித் தலைவருமான கலாச்சார உத்தியோகத்தர் சாய்ந்தமருதைச் சேர்ந்த உதுமாங்கண்டு முஹம்மட் றிம்ஸான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அண்மையில் கல்முனை (Kalmunai) மாவட்ட நீதிமன்றத்தில் நீதவான் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தவகையில், சாய்ந்தமருது பிரதேசத்தில் நன்கறியப்பட்ட கலைஞரான இவர் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலையத்தில் நுண்கலைகள் பட்டம் பெற்ற பட்டதாரியுமாவார்.

பிரதேச கலைஞர்கள்

குறிப்பாக, கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பு மற்றும் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிலைய பழைய மாணவர்கள் அமைப்பு போன்றவற்றின் நிர்வாக உறுப்பினராகவும், பிரபல சமூக சேவையாளராகவும் திகழ்கின்றார்.

கலாச்சார மத்திய நிலைய பொறுப்பதிகாரி றிம்ஸான் சமாதான நீதவானாக நியமனம் | Sainthamaruthu New Justice Of Peace

மேலும், கல்முனை சாஹிரா தேசிய பாடசாலை பழைய மாணவர்கள் அமைப்பு மீளெழுச்சி பெற உருவாக்கப்பட்ட குழு உறுப்பினராக இருந்து செயற்பட்டவர் என்பதுடன், சாய்ந்தமருது பிரதேச கலைஞர்கள் தேசிய ரீதியாக சாதிக்க பல்வேறு வகைகளிலும் பல வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள்