கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி உள்ளிட்ட நாடுகள் திடீர் முடிவு

United Russia Saudi Arabia World Economic Crisis
By Fathima Apr 03, 2023 06:34 PM GMT

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க ஒபெக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

13 நாடுகள் அங்கம் வகிக்கும் இந்த ஒபெக் கூட்டமைப்பில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள நாடான சவுதி அரேபியா , தினசரி க்ச்சா எண்ணெய் உற்பத்தியை 5 இலட்சம் பீப்பாய்களாக குறைக்க முடிவு செய்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க சவுதி உள்ளிட்ட நாடுகள் திடீர் முடிவு | Sadudi To Cut Oil Production

இதற்கமைய, மே மாதம் முதல் நடப்பு ஆண்டு இறுதி வரை தினமும் 5 லட்சம் பீப்பாய்கள் மட்டுமே கச்சா எண்ணெய் உற்பத்தி செய்ய இருப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க இருப்பதாக அறிவித்துள்ளன.

கச்சா எண்ணெய் சந்தையில் நிலைத்தன்மையை ஏற்படுத்துவதற்கு ஆதரவாக இந்த உற்பத்தி குறைப்பை மேற்கொண்டுள்ளதாக சவுதி அரேபியா எரிசக்தி துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.