கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது உக்ரைனை தாக்கிய ரஷ்யா ஏவுகணைகள்
Russo-Ukrainian War
Ukraine
Russia
By Rakshana MA
மில்லியன் கணக்கான உக்ரேனியர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது, ரஷ்யா இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் மீது தொடர்ச்சியான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.
அங்கு 70 ஏவுகணைகள் மற்றும் 100 ஆளில்லா விமான தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர் தாக்குதல்
எனினும், உக்ரைன் 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த தொடர் தாக்குதல்களால், உக்ரைனின் பல பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதுடன், எரிசக்தி விநியோகமும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |