உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷ்யா வான்வழித் தாக்குதல்

Vladimir Putin Russo-Ukrainian War Ukraine Russian Federation
By Fathima May 17, 2023 03:03 AM GMT
Fathima

Fathima

உக்ரைன் தலைநகர் கீவ்வை குறிவைத்து ரஷ்யா மீண்டும் தொடர் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த மாதத்தில் உக்ரைன் தலைநகரை ரஷ்யா குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்துவது இது 8ஆவது முறையாகும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாட்டு ஊடகங்கள் 

ரஷ்ய இராணுவம் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் தலைநகரை குறிவைத்து ரஷ்யா வான்வழித் தாக்குதல் | Russia Drone Attack On Ukraine Capital Kyiv

ரஷ்யா வீசிய 18 ஏவுகணைகளை அதன் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு இடைமறித்ததாக உக்ரைன் கூறியுள்ளது.

எனினும் ரஷ்யா தனது படைகளால் ஏவப்பட்ட ஏவுகணைகள் தங்கள் இலக்குகளை வெற்றிகரமாக தாக்கியதாக கூறுகின்றது.