ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதித்த ரஷ்யா

iPhone Apple Russia
By Fathima Jul 17, 2023 07:09 PM GMT
Fathima

Fathima

ரஷ்யாவில் அரசத்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த ரஷ்ய வர்த்தக துறை அமைச்சகம் தடைவிதித்துள்ளது.

ஏற்கெனவே சில அரச அதிகாரிகளுக்கு ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் ஆப்பிள் சாதனங்களில் அரசு அதிகாரிகள் பணி சார்ந்த சில தகவல் பரிமாறக்கூடாது என்றும், சொந்த தேவைக்காக மட்டும் ஆப்பிள் நிறுவன சாதனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


உளவு பார்க்கும் அமெரிக்கா

கடந்த ஜூன் மாதம் ஃபெடரல் பாதுகாப்பு நிறுவனம் வைத்த குற்றச்சாட்டிற்கு அமைய ஆப்பிள் நிறுவன சாதனங்கள் மூலமாக அமெரிக்க உளவு நிறுவனங்கள் உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் நேட்டோ நாடுகளில் வசித்து வரும் ரஷ்ய அதிகாரிகளின் ஆப்பிள் திறன்பேசிகளில் உளவு மென்பொருள் நிறுவப்பட்டிருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

ஆனால் ஆப்பிள் நிறுவனம் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்ததையடுத்து தனியுரிமை பாதுகாப்பில் கவனமாக செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.