ஜனாதிபதியின் உருவத்தினை ரூபிக்கியூப் மூலம் செய்து உலக சாதனை படைத்த மாணவன்

Anura Kumara Dissanayaka Sri Lanka Guinness World Records School Incident
By Rakshana MA Dec 05, 2024 07:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் உருவப்படத்தினை ரூபிக்ஸ் க்யூப்ஸைப் பயன்படுத்தி உருவாக்கி 11 வயது சிறுவன் ஒருவர் சோழன் உலக சாதனை படைத்துள்ளார்.

இம்புல்கொடையைச் சேர்ந்த 11 வயது சிறுவனான சன்சுல் செஹன்ஷா லக்மால், 1,200 ரூபிக்ஸைப் பயன்படுத்தி 91 அங்குல உயரமும் 68 அங்குல அகலமும் கொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பாரிய உருவப்படத்தை உருவாக்கியுள்ளார்.

அவர் இந்த சாதனையை 3 மணி நேரம், 13 நிமிடங்கள், 7 வினாடிகளில் செய்து சோழன் உலக சாதனைகளில் அவர் இடம்பிடித்துள்ளார்.

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

சோழன் உலக சாதனை

சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் மற்றும் பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன.

யக்கலவில் உள்ள ரணவிரு ஆடை நீச்சல் தடாகத்தில் முகாமின் கட்டளை அதிகாரி பிரிகேடியர் மஹா துவாக்கர் மற்றும் பிரதி கட்டளை அதிகாரி பிரிகேடியர் வாசகே ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

ஜனாதிபதியின் உருவத்தினை ரூபிக்கியூப் மூலம் செய்து உலக சாதனை படைத்த மாணவன் | Rubik Cube Anura Face Guinnes Record

சோழன் உலக சாதனையின் பொதுச் செயலாளர், இந்திரநாத் பெரேரா, துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, STEPS இன் இயக்குநரும், சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் ஐரோப்பிய நாடுகளுக்கான தலைவருமான பிரான்சிஸ் ஜேசுதாசன், பீப்பிள்ஸ் ஹெல்பிங் பீப்பிள் ஃபவுண்டேஷன் இயக்குநர் மற்றும் செயற்குழு உறுப்பினர், சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ், சிறுவனின் சாதனை முயற்சியை முறையாக கண்காணித்தது.

சன்சுலின் சாதனையை அங்கீகரிப்பதற்காக, அமைப்பாளர்கள், ராணுவ அதிகாரிகளுடன் சேர்ந்து, சட்டமிட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை மற்றும் அவரது சிறப்பான சாதனையை கௌரவிக்கும் வகையில் ஒரு கோப்பையை சாதனைச் சிறுவனுக்கு வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சார கட்டணம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

பல பகுதிகளில் உடைத்த தேங்காயின் விலையும் அதிகரிப்பு!

பல பகுதிகளில் உடைத்த தேங்காயின் விலையும் அதிகரிப்பு!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery