கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத்!
Sri Lanka
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
Qatar
By Rakshana MA
கட்டாருக்கான இலங்கை தூதுவராக ரோஷன் சித்தாரா கான் அசாத்(Roshan Sithara Khan Asad) அண்மையில் டோஹாவில் கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
கட்டார் நாட்டிற்கான இலங்கைத் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது பெண் இவர் ஆவார்.
கட்டாருக்கான இலங்கை தூதுவர்
மேலும், இலங்கையில் வெளியுறவு சேவை அதிகாரியாக 27 ஆண்டுகள் சேவை அனுபவத்தைக் கொண்ட சித்தாரா கான், 1998 ஆம் ஆண்டு வெளியுறவு சேவையில் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சகம் உட்பட பல்வேறு துறைகளில் உயர் பதவிகளை வகித்துள்ள அவர், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனுக்கான மேலதிக செயலாளராகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |