விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியில் மாற்றம்
இலங்கையில் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியில் விரைவில் மாற்றம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையின் விளையாட்டு துறை அமைச்சர் ரொசான் ரணசிங்க தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சர் ரொசான் பதவி விலக நேரிடும் அல்லது பதவி விலக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தை இடை நிறுத்தி, இடைக்கால நிர்வாக குழு ஒன்றை நியமித்தமை போன்ற தீர்மானங்கள் தனித்து எடுக்கப்பட்டவை என தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்துடன் கலந்தாலோசிக்காது முக்கிய தீர்மானங்களை அமைச்சர் ரொசான் ரணசிங்க எடுத்துள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அமைச்சர் ரொசான், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கரை சந்தித்தபோது பதவி விலகுவதாக கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே அமைச்சர் ரொசான் ரணசிங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தரப்புடன் பேச்சு வார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது.
இவ்வாறான ஒரு பின்னணியில் விரைவில் விளையாட்டுத்துறை அமைச்சுப் பதவியில் மாற்றம் வரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.