லலித் அத்துலத்முதலி மற்றும் காமினி திசாநாயக்க வரிசையில் ரொஷான் ரணசிங்க: சபையில் தெரிவிக்கப்பட்ட விடயம்
தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (04.12.2023) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க போன்றவர்களை போன்று நானும் நெடுஞ்சாலையில் கொல்லப்படலாம் என ஊடகங்கள் ஊடாக பரப்பப்பட்டு வருகின்றது.
விளையாட்டிற்காக அர்ப்பணிப்பு
தனியார் யூடியூப் பக்கமொன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (01) ஒளிபரப்பான நேர்காணலில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
நான் நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை கூட பெறாமல் அனைத்தையும் விளையாட்டு நிதியில் வரவு வைத்து விளையாட்டிற்காக என்னை அர்ப்பணித்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மோசடி இன்றி 69 இலட்சம் மக்களையும் தான் பிரதிநிதித்துவப்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |