பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக ரோஹித போகொல்லாகம நியமனம்
Presidential Secretariat of Sri Lanka
Sri Lanka
United Kingdom
By Fathima
முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகம பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக நியமனமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
அதன்படி பிரித்தானியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகராக எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
ரோஹித போகொல்லாகம
தற்போது இலங்கையின் உயர்ஸ்தானிகராக கடமையாற்றும் சரோஜா சிறிசேன, அந்த பதவியிலிருந்து விலகவுள்ளார் என கூறப்படுகின்றது.
ரோஹித போகொல்லாகம கடந்த 28 ஜனவரி 2007 முதல் 8 ஏப்ரல் 2010 வரை வெளியுறவு அமைச்சராக செயற்பட்டிருந்தார்.
மேலும் 2017 ஜூலை முதல் 2018 டிசம்பர் வரை கிழக்கு மாகாண ஆளுநராகவும் பணியாற்றியிருந்தமையும் சுட்டிக்காட்டத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |