அதிவேக நெடுஞ்சாலை தொடரும் விபத்துக்கள்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Bandula Gunawardane Accident Highways In Sri Lanka
By Fathima Jan 27, 2024 09:57 AM GMT
Fathima

Fathima

நாட்டில் 2024 ஆம் ஆண்டின் கடந்த 26 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே முக்கிய காரணம் அமைச்சர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டி உள்ளார்.

நெடுஞ்சாலைகளில் தொடரும் விபத்துக்களை தடுக்க அரசு எடுக்க உள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் கருத்துத் வெளியிட்டுள்ளார்.

விதிகளை மீறும் சாரதி

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கை விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலை தொடரும் விபத்துக்கள்: சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Road Lights Colombo Katunayake Expressway

சாரதிகள் விதிமுறைகளை கடைப்பிடிக்காததே அதிவேக நெடுஞ்சாலைகளில் ஏற்படும் விபத்துக்களுக்கு முக்கிய காரணம் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிவேக நெடுஞ்சாலையில் விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்து அடுத்த வாரம் முதல் விசேட வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மற்றும் மாற்றுப்பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள பெரும்பாலான தெருவிளக்குகள் அணைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் இருள் சூழ்ந்துள்ளமையும் விபத்துகளுக்கு காரணமாக அமைவதாகவும் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.