கம்பஹாவில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

By Madheeha_Naz May 03, 2024 10:06 AM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

Courtesy: Chandana

கம்பஹா - மினுவாங்கொடை(Minuwangoda) சுகாதார வைத்திய பிரிவுக்கு உபட்ட பல்வேறு பிரதேசங்கள் எலிக் காய்ச்சல் பரவும் அபாயமிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

அதன்படி, மாதெல்கமுவ ,நெதகமுவ , பத்தடுவன , நில்பனாகொட , உடுகம்பொல, மெதகம்பிட்டிய , வெகொவ்வ ,மாரபொல , யட்டியன , வீதியவத்த , அஸ்கிரிய மற்றும் கல்லொழுவ ஆகிய பிரதேசங்கள் எலிக் காய்ச்சல் பரவும் அபாயமிக்க இடங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எலிக்காய்ச்சல் நோயாளர்கள் 

இந்த பிரதேசங்களில் கடந்த ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான எலிக்காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியிருந்ததாக கூறப்படுகிறது.

கம்பஹாவில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் | Risk Of Rat Fever Spread In Gampaha

இந்நிலையில், இவ்வருடத்தின் முதல் நான்கு மாத காலப்பகுதியில் மாத்திரம் 17 எலிக்காய்ச்சல் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 2 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.