சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம்! மருத்துவரின் எச்சரிக்கை

By Sivaa Mayuri Aug 26, 2023 10:51 AM GMT
Sivaa Mayuri

Sivaa Mayuri

கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தளத்திற்கு கடுமையான அடிமையாதலினால் சிறுவர்களுக்கு ஞாபக மறதி ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் உளவியல் மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.

வீடியோ கேம்களுக்கு குழந்தைகள் அடிமையாகிவிடுவது ஒரு தீவிரமான நிலை மற்றும் மனநோய் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால் குழந்தைகள் கல்வியில் தோல்வி அடைகிறார்கள், அவர்கள் பெற்றோரை எதிரிகளாகப் பார்க்கிறார்கள் என்று மனநல மருத்துவர் கூறியுள்ளார்.

எனவே குழந்தைகள் கையடக்கத் தொலைபேசி மற்றும் இணையத்தைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும், அவற்றில் அடிமையாதல்களால் அவர்களின் எதிர்காலம் முற்றாக அழிந்துவிடும் என மனநல மருத்துவர் ரூமி ரூபன் தெரிவித்துள்ளார்.