எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

Sri Lanka Fuel Crisis Fuel Price In World National Fuel Pass
By Thahir Apr 06, 2023 09:49 AM GMT
Thahir

Thahir

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெட்ரோலியம் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் மற்றும் பிராந்திய முகாமையாளர்கள் எரிபொருள் பெற காசோலைகள் மூலம் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

எரிபொருள் முன்பதிவுகள் பணமாக மட்டுமே வழங்கப்படும் என அதன் நிதித் திணைக்களத்தின் தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக நேற்று பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முன்பதிவுகளை பெற முடியவில்லை என பெட்ரோலிய விநியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

போயா தினமான நேற்றைய தினம் வங்கிகள் மூடப்பட்டமையினால் பணம் பெறுவதில் சிரமம் ஏற்பட்டதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் தொடர்ந்தும் மக்கள் எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதாகவும் சங்கத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பண்டிகைக் காலங்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால் நுகர்வோர் கடும் சிரமங்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் | Risk Of Fuel Shortage