அதிகரித்து வரும் சீனி விலை குறித்து நுகர்வோர் அதிகாரசபையின் விசேட கவனம்

Sri Lanka
By Nafeel May 07, 2023 02:52 PM GMT
Nafeel

Nafeel

சீனி விலை அதிகரிப்பு தொடர்பில் நுகர்வோர் விவகார அதிகார சபை விசேட கவனம் செலுத்தியுள்ளது

சீனியின் விலையை அதிகரிப்பதற்காக வர்த்தகர்கள் கையிருப்புகளை மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அது தொடர்பில் துரித சட்ட நடவடிக்கை எடுக்க அதிகாரசபை எதிர்பார்த்துள்ளது

 இவ்வாறு சீனி கையிருப்புகளை மறைத்து வைத்தால், அவை நுகர்வோருக்கு விநியோகிக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார் .

எவ்வாறாயினும், எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.