பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மோசமான செயல்

Sri Lankan Peoples Sri Lankan Schools Drugs School Children
By Rakshana MA Mar 13, 2025 06:17 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகும் போக்கு அதிகரித்து வருவதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை தெரிவித்துள்ளது.

சட்டவிரோத போதைப்பொருட்களுக்கு மாற்றாக சுமார் 150 வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுவதால், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளின் பயன்பாடு அதிகரித்து வருவதாக அந்த சபையின் தலைவர் வைத்திய நிபுணர் இந்திகா வன்னிநாயக்க தெரிவித்துள்ளார்.

2000க்கும் அதிகமாக போலி இலக்கத்தகடுகளுடன் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் : வெளியான தகவல்

2000க்கும் அதிகமாக போலி இலக்கத்தகடுகளுடன் பயன்படுத்தப்படும் சொகுசு வாகனங்கள் : வெளியான தகவல்

தவறான பயன்பாடு

2024 ஆம் ஆண்டில், போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட ஒரு இலட்சத்து 62,000 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை மாணவர்களிடையே அதிகரிக்கும் மோசமான செயல் | Rising Drug Use Among School Students In Sri Lanka

2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பொன்றில் நாட்டில் 92,000 முதல் ஒரு இலட்சம் பேர் வரை போதைப்பொருள் அடிமைகளாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை புற்றுநோய் நோயாளர்களுக்கு பரிந்துரைக்கப்படும் வலி நிவாரணிகள் உள்ளிட்ட பல மருந்துகள் போதைக்கு அடிமையானவர்களால் அதிகளவில் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பெரியவர்கள் மட்டுமல்லாது 15 முதல் 17 வயதுடைய கணிசமான எண்ணிக்கையிலான பாடசாலை மாணவர்களும் இளைஞர்களும் இத்தகைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.   

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் புதிய அறிவிப்பு

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW