வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் ஆபத்து அதிகரிப்பு

Northern Provincial Council Sri Lanka Sri Lankan Peoples Dengue Prevalence in Sri Lanka Eastern Province
By Rakshana MA Nov 06, 2024 01:33 PM GMT
Rakshana MA

Rakshana MA

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும் நிலை காணப்படுவதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தகவல் வெளியிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தொடரும் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக நோயின் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான வழக்கு: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

டெங்கு அபாயம்

மேலும் தெரிவிக்கையில்,

நாட்டிலுள்ள 08 சுகாதார வைத்திய அதிகாரிகளுக்குட்பட்ட பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும் தற்போது நாடளாவிய ரீதியில் 42,730 பேர் டெங்கு தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் ஆபத்து அதிகரிப்பு | Rising Dengue Impact In North And East Provnc Sl

இப்பருவப் பெயர்ச்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோய் தொற்று தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுகின்றது.

இதற்கமைய குறித்த பகுதிகளில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு

இந்திய அரசினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சத்திர சிகிச்சைப் பிரிவு திறந்து வைப்பு

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW