கட்சிகளின் இணைவு குறித்து ரிஷாட் வெளியிட்ட அறிவிப்பு

Risad Badhiutheen Sri Lanka Politician Eastern Province
By H. A. Roshan May 12, 2025 01:05 PM GMT
H. A. Roshan

H. A. Roshan

தமிழ் பேசும் கட்சிகளோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம் என இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

கிண்ணியா(Kinniya) பெரியாற்றுமுனை நகர சபை கட்டிடத்தில் இன்று (12) இடம்பெற்ற கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவான உறுப்பினர்களுடனான சந்திப்பின் போது ஊடகங்களுக்கு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இதன் மூலம் சபைகளில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவோம். அத்துடன், சில சபைகளில் பிரதி தவிசாளர்களை பெறுவதற்கும், சில சபைகளில் ஆட்சியின் பங்காளர்களாக இருப்பதற்கும் செயற்பட்டு வருகிறோம்.

மட்டக்களப்பில் கைதிகள் விடுதலை

மட்டக்களப்பில் கைதிகள் விடுதலை

மக்களுக்கான சேவைக்காக..

குறிப்பாக வடகிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களிலும் உள்ள வாக்களித்த மக்களுக்காக எமது கட்சி சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் அதேபோல கட்சியினுடைய வேட்பாளர்கள் அரும்பாடுபட்டு தங்களுக்காகவும் கட்சிக்காகவும் ஒன்றுபட்டு வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறேன் .

கட்சிகளின் இணைவு குறித்து ரிஷாட் வெளியிட்ட அறிவிப்பு | Rishad To Join Tamil Speaking Parties

அதிகபட்ச ஆதரவுகள் கிடைக்கப்பெற்றுள்ள, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு அவற்றில் எதுவாகவும் இருக்கலாம் இதில் ஆட்சியின் தலைமைப்பொறுப்பை ஏற்கவும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறோம்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் நல்ல சபைகளை உருவாக்கி அதன் மூலம் பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் உச்ச பயனை பெற்றுக்கொடுப்போம்.

எதிர்காலத்தில் திருகோணமலை மாவட்டத்துக்கான மாவட்ட தலைமைத்துவம் மற்றும் மத்திய குழு உள்ளிட்டவற்றை உயர்பீட ஒன்றுகூடலின் பின்பு முடிவுகளை எடுப்போம்.

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ள விளையாட்டு

ஆப்கானிஸ்தானில் தாலிபான்களால் தடை விதிக்கப்பட்டுள்ள விளையாட்டு

தேர்தலின் முடிவுகள் 

இம் முறை திருகோணமலை மாவட்டத்திற்கு உள்ளூராட்சி தேர்தல் நல்லதொரு முடிவுகளை பெற்று மாற்றம் கண்டுள்ளது.

இதற்காக கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் செயலாளர் உள்ளிட்டவர்கள் உழைத்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கட்சிகளின் இணைவு குறித்து ரிஷாட் வெளியிட்ட அறிவிப்பு | Rishad To Join Tamil Speaking Parties

மேலும், குறித்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், முத்து முஹம்மது மற்றும் கட்சியின் உயர் பீட உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

பேருவளையில் பெண்ணின் தாக்குதலால் மரணமடைந்த நபர்

பேருவளையில் பெண்ணின் தாக்குதலால் மரணமடைந்த நபர்

முள்ளிப்பொத்தானை காட்டுப்பகுதிக்குள் காயங்களுடன் மீட்கப்பட்ட கரடி

முள்ளிப்பொத்தானை காட்டுப்பகுதிக்குள் காயங்களுடன் மீட்கப்பட்ட கரடி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery