சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

Risad Badhiutheen Sajith Premadasa
By Mayuri Aug 15, 2024 02:32 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பாக கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக வடக்கு, கிழக்கில் பல இடங்களுக்கு சென்று மக்களையும் மாவட்ட பிரதிநிதிகளையும் கட்சித் தொண்டர்களையும் ஆதரவாளர்களையும் சந்தித்து, மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்ததாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் என நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. இதன்போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானம்

மேலும் கூறுகையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உயர்பீடம், அரசியல் அதிகாரபீடம் ஆகியன, இன்று மாலை கொழும்பில் கூடி, ஏகமனதாக இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. கட்சியின் உயர்பீடத்திலும் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடினோம். உயர்பீட உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டோம்.

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம் | Rishad Supports Sajith

அதேபோன்று, மக்களின் கருத்துக்களும் உயர்பீடத்தில் முன்வைக்கப்பட்ட பின்னரே, சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

ஆதரவாளர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்த போது, கட்சியின் உயர்பீடம் எடுக்கும் முடிவையே தாங்கள் ஆதரிப்பதாகவும் உறுதியளித்தனர்.

எனவே, சஜித் பிரேமதாசவை வெல்ல வைப்பதற்கான தீவிரப் பிரசாரங்களில் ஈடுபடுவதெனவும் தீர்மானிக்கப்பட்டது என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW