மதுகடையை மூடுமாறு ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை

Risad Badhiutheen
By Mayuri Sep 26, 2024 01:10 PM GMT

மன்னார் பிரதான வீதியில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையின் அனுமதிப் பத்திரத்தை இரத்து செய்யுமாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதிக்குக் கடிதமொன்றை அனுப்பி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இந்தக் கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

மக்களிடையே பாரிய மன உளைச்சல்

குறித்த மதுபானசாலை பாடசாலைகள், ஆடைத்தொழிற்சாலைகள் மற்றும் மக்கள் குடியிருப்புக்கு அருகில் அமைந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மதுகடையை மூடுமாறு ரிஷாட் பதியுதீன் ஜனாதிபதியிடம் கோரிக்கை | Rishad S Letter To The President To Close The Bar

இந்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ளமையானது குறித்த பகுதி மக்களிடையே பாரிய மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பில் கடந்த மாதம் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW