சஜித்திடம் அமைச்சு பதவி கோரிய ரிஷாட்: இஷாக் ரஹ்மான் பகிரங்கம்

Ranil Wickremesinghe Risad Badhiutheen Sajith Premadasa
By Laksi Aug 16, 2024 01:47 PM GMT
Laksi

Laksi

நல்ல பணம் சம்பாதிக்கக்கூடிய அமைச்சுப்பதவி ஒன்றை வழங்குமாறு சஜித் பிரேமதாசவிற்கு ரிஷாட் பதியுதீன் நிபந்தனைகளை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை நாடாளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அக்கட்சியைச் சேர்ந்த மூவர் இந்த விடயத்தை மேலும் தெரிவித்துள்ளனர்.

ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள அலி ஸாஹிர் மௌலானா..!

ரணிலுக்கு ஆதரவு வழங்கியுள்ள அலி ஸாஹிர் மௌலானா..!

பதவிகள் 

இந்தநிலையில், அடுத்த நாடாளுமன்றத்தில் அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பாக பல நிபந்தனைகளை முன்வைத்து பதியுதீன் , சஜித் பிரேமதாசவுடன் இணைந்துள்ளார் என இஷாக் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

சஜித்திடம் அமைச்சு பதவி கோரிய ரிஷாட்: இஷாக் ரஹ்மான் பகிரங்கம் | Rishad Asked For Ministerial Post In Sajith Regime

அத்துடன் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ள நிறுவனங்களுக்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சுக்கள் நல்ல முறையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என தாம் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய ரிஷாட்பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உறுப்பினராக இஷாக் ரஹ்மான் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஐக்கிய மக்கள் சக்தியின் இரண்டு எம்.பி.க்கள் ரணிலுக்கு ஆதரவு!

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு..! மைத்திரி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW