ஓய்வு பெறும் நீதிபதி இளஞ்செழியன் : கௌரவப்படுத்திய சட்டத்தரணிகள்
வவுனியா(Vavuniya) மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டு விழா வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
அதன் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் தலைமையில் நேற்று(01) வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள விருந்தினர் விடுதியில் நடைபெற்றுள்ளது.
கௌரவப்படுத்தும் நிகழ்வு
குறித்த நிகழ்வின் ஒரு அங்கமாக சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் டி.கருணாகரனுடன் சம்மாந்துறை சட்டத்தரணிகள், சங்க சிரேஷ்ட சட்டத்தரணிகளும், மேல் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் மா.இளஞ்செழியனின் சேவை நலன் பாராட்டி பொன்னாடை போற்றி கௌரவித்தனர்.
இந்த நிலையில், ஏ9 பிரதான வீதியில் இருந்து வரவேற்கப்பட்டதுடன், 27 வருட நீதித்துறை சேவையை பாராட்டி வடக்கு - கிழக்கு பகுதிகளில் இருந்து வருகை தந்த மேல் நீதிமன்ற, மாவட்ட நீதிமன்ற, நீதவான் நீதிமன்ற கௌரவ நீதிபதிகள், சட்டத்தரணிகள் எனப் பலரும் அவரது சேவையை பாராட்டி கௌரவிப்புக்களை வழங்கியிருந்தனர்.
மேலும், நீதித்துறையில் 27 வருடத்தை பூர்த்தி செய்த மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டிருக்க வேண்டிய நிலையில் தற்போது ஓய்வு பெற்றுச்செல்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |