கோர விபத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

Sri Lanka Police Accident Death
By Fathima Jan 11, 2024 01:55 PM GMT
Fathima

Fathima

கோர விபத்தில் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (10.1.2024) மாலை இடம்பெற்றுள்ளது என மிகிந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

பொலிஸார் விசாரணை

கோர விபத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு | Retired Police Death In Road Accident

ஹொறவப்பொத்தானையிலிருந்து அநுராதபுரம் நோக்கி அசுர வேகத்தில் பயணித்த தனியார் பேருந்து அதே திசையில் கொழும்பை நோக்கிப் பயணித்த இ.போ. சபை பேருந்தை முந்திச் செல்ல முற்படுகையில் எதிரில் வந்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதுண்டதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்த ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் தனியார் பேருந்து சாரதி உட்பட அதில் பயணித்த ஐவர் படுகாயமடைந்த நிலையில் அநுராதபுரம் ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மிகிந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.