மீண்டும் ஆரம்பிக்கப்படும் பாடசாலை மாணவர்களுக்கான திட்டம்

Ranil Wickremesinghe Economy of Sri Lanka Sri Lankan Schools
By Mayuri May 19, 2024 07:40 AM GMT

பொருளாதார சிக்கல்கள் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்ட “சுரக்ஷா” மாணவர் காப்புறுதி திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

ஜூன் மாதம் முதலாம் வாரத்தில் இருந்து நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களும் இந்தக் காப்புறுதியின் மூலம் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சரவை அங்கீகாரம்

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவுடன் இணைந்து நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த கூட்டு அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.