அலி சப்ரி ரஹீமை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்க தீர்மானம்
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து அலி சப்ரி ரஹீமை நீக்குவதற்கான பிரேரணையைக் கொண்டுவர கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் இந்தப் பிரேரணையைக் கொண்டுவருவதற்கு இன்றைய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இடம்பெற்ற விசாரணைகளின் போது, 6 கோடி ரூபா பெறுமதியான மூன்றரை கிலோ கிராம் தங்கத்தை நாட்டுக்கு சட்டவிரோதமாக கொண்டுவந்த குற்றச்சாட்டில் முஸ்லிம் ஐக்கிய தேசிய கூட்டமைப்பின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் சுங்க அதிகாரிகளினால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த 23ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
பதவி விலக்கல்
இதன்போது அவரின் பயணப் பொதியிலிருந்து 91 கைபேசிகளும் கைப்பற்றப்பட்டிருந்தன. பின்னர் 7.5 மில்லியன் ரூபா அபாரதம் விதிக்கப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து அலி சப்ரி ரஹீமை நீக்க கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |