இலங்கையில் கல்வி கற்பதற்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள அனுமதி

Ranil Wickremesinghe Sri Lanka Education
By Shalini Balachandran Jul 17, 2024 09:43 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இலங்கையின் (Sri Lanka) பட்டப்படிப்பு வழங்கும் கல்லூரிகளுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் கீழ் உள்ள 17 பல்கலைக்கழகங்களில் வெளிநாட்டு மாணவர்களுக்கு தற்போது ஆண்டுதோறும் ஐந்து  வீதம் ஒதுக்கப்படுகிறது.

ஆசியாவின் அறிவு மையம்

அத்தோடு, பல்கலைக்கழகங்கள் சட்டத்தின் 25(4) பிரிவின்படி அங்கீகரிக்கப்பட்ட 26 பட்டப்படிப்பு கல்லூரிகளுக்கு வெளிநாட்டு மாணவர்களை சேர்க்கும் நோக்கத்தை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையை ஆசியாவின் அறிவு மையமாக மாற்றும் நோக்கத்தை அடைய முடியும் என்பதை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது.

இலங்கையில் கல்வி கற்பதற்கு வெளிநாட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள அனுமதி | Reservation For Foreign Students In Sl University

மேலும், அண்மையில் நாட்டில் புதிய பல்கலைக்கழகமொன்றை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் அதனால் புதிய மூன்று தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் இலங்கைக்கு கிடைக்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW