நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் சடலமாக மீட்பு

Batticaloa Eastern Province Accident
By Fathima Jan 13, 2024 03:15 PM GMT
Fathima

Fathima

மட்டக்களப்பு - நாசிவன்தீவு பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயதுடைய அதீக் எனும் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் நேற்று (12) வெள்ளிக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், இன்று (13) சனிக்கிழமை காலை 7.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

சுழியோடிகளின் முயற்சி 

அதனைத் தொடர்ந்து, சுழியோடிகள் கடும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதையடுத்து, இன்றைய தினம் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

நீரில் அடித்துச் செல்லப்பட்ட வாழைச்சேனை இளைஞன் சடலமாக மீட்பு | Rescued Dead Body Of Youth

மேலும், இந்த விடயம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.