மட்டக்களப்பில் அரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Jan 10, 2025 01:30 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு(Batticaloa)- கோட்டைக் கல்லாற்றில் மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் அரிய வகைப் புலியின் உடல் இன்று (10) இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

மக்கள் வாழும் பகுதியில் இவ்வாறான அரிய வகை புலிகள் காடுகளில் இருந்து உள்நுழைந்து மீன் உட்பட கிராம வாசிகளின் வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடி வந்த நிலையில் இவ்வாறு சிக்கி உயிரிழந்துள்ளது.

அண்மைக்காலமாக குறித்த பகுதியில் உள்ள கோழிகளை மீன்பிடிப் பூனை வேட்டையாடி வந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் அதிரடியாக கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் அதிரடியாக கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விசாரணை

கோட்டைக்கல்லாறு-பிரதான வீதியில் மீட்கப்பட்டுள்ள சுமார் 3 அடி நீளமான புலியின் உடல் விபத்து ஏற்பட்டு உயிரிழந்துள்ளதா அல்லது யாராவது தாக்கி கொல்லப்பட்டதா என்ற விசாரணைகளை வன வனஜீவராசி திணைக்களமும் பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மட்டக்களப்பில் அரிய வகை புலி இறந்த நிலையில் மீட்பு | Rescue Of Fishing Cat Carcass In Batticaloa

காட்டுப் பூனை என அழைக்கப்படும் இந்தப்புலியை சுற்றி மல்லிகைப் பூக்கள் தூவப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் கோட்டைக்கல்லாற்று பாலம் அருகிலும் புலியின் உடல் ஒன்றும் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW