இறங்குத்துறை திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு கோரிக்கை (PHOTOS)

Sri Lanka Parliament Trincomalee Sri Lanka
By Mubarak Jul 06, 2023 08:55 PM GMT
Mubarak

Mubarak

மூதூர் மற்றும் தோப்பூர் மீனவர் இறங்குத்துறை திட்டத்தை மீள ஆரம்பிக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் (06. 07. 2023) நடைபெற்ற மீன்பிடித்துறை அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூதூர் மற்றும் தோப்பூர் பிரதேசத்தில் மீனவர் இறங்குத்துறை அமைப்பதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பித்திருந்தும் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி காரணமாக இடைநிறுத்தப்பட்ட திட்டங்களை மீள நடைமுறைபடுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்போது கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் 2024 இல் இத்திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.


GalleryGallery