கோதுமை மாவின் விற்பனை விலை தொடர்பில் நிதி அமைச்சிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Champika Ranawaka Sri Lanka Food Crisis Ministry of Finance Sri Lanka Harsha de Silva Economy of Sri Lanka
By Fathima Aug 18, 2023 07:32 AM GMT
Fathima

Fathima

இரண்டு முன்னணி நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதைத் தடுக்கவும், நுகர்வோரைப் பாதுகாக்கவும் ஒரு கிலோ கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாயாக அறிவிக்குமாறு நாடாளுமன்ற பொது நிதிக் குழு, நிதி அமைச்சக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நாடாளுமன்ற நிதி தெரிவுக்குழு தலைவர் ஹர்ச டி சில்வா இல்லாத நிலையில், தற்காலிகத் தலைவராக நியமிக்கப்பட்ட பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் திகதி இந்தக் குழு கூடியபோது இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்றத் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தக் கூட்டத்தில், ஜூன் 14, 2023 திகதியிடப்பட்ட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி சட்டத்தின் கீழ் உள்ள ஒழுங்குமுறைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கோதுமை மாவின் விற்பனை விலை தொடர்பில் நிதி அமைச்சிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | Request To Declare Selling Price Of Wheat Flour

கோதுமை மாவின் இருப்புக்கள்

மேலும், வர்த்தமானியின் விரும்பிய நோக்கங்கள் எட்டப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக, தற்போதுள்ள கோதுமை மாவின் இருப்புக்கள் குறித்த துல்லியமான தரவுகளை வழங்குமாறு குழுவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து வரிகளையும் கழித்த பின்னர் சிமெந்தின் விற்பனை விலையானது, துறைமுகத்தில் இறக்கப்படும் விலையை விட 700 ரூபாய் அதிகம் என்று அந்த பொது நிதிக்குழு தெரிவித்துள்ளது.