ஞானசார தேரருக்காக முஸ்லிம் சமூகத்திடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
ஞானசார தேரர் செய்த தவறுக்காக நீதிமன்றில் மன்னிப்பு கோரி, பின்னர் நாட்டின் நல்லிணக்கத்திற்காக பாடுபடுவது குறித்து ஆலோசித்து அவருக்கு சுதந்திரம் வழங்க தலையிடுமாறு முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் மத மற்றும் அரசியல் தலைவர்களையும் கேட்டுக்கொள்வதாக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
அல்லாஹ் தொடர்பில் தேரர் தெரிவித்த கருத்து குறித்து றிசாத் பதியுதீன், அசாத் சாலி, முஜிபர் ரஹ்மான் ஆகியோர் தாக்கல் செய்த வழக்கிலேயே இந்த தண்டனை கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் மக்களின் உரிமை
கடந்த கோவிட் தொற்றுநோய்களின் போது இறந்த உடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட்டது.
எனினும் அதனை எதிர்த்து முஸ்லிம் மக்களின் உரிமைக்காக குரல் கொடுத்த ஒரே பிக்கு ஞானசார தேரரே என்றும், அவர் முஸ்லிம் மக்களின் அடக்க உரிமைக்காகவும் உண்மைகளை முன்வைத்து நின்றார் என ஓஷல ஹேரத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த சம்பவத்தின் பின்னர் ஞானசார தேரர் அவ்வாறான தவறை செய்யவில்லை எனவும், 5-6 வருடங்கள் நாட்டின் நல்லிணக்கத்திற்காக பாடுபட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், ஞானசார தேரர் தன்னை திருத்திக் கொண்டு சமூகத்திற்கு பெரும் சேவையை ஆற்ற முடியும். அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும் ஓஷல ஹேரத் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |