இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிருகவதை சட்டம் தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka
By Fathima Jun 18, 2023 12:15 AM GMT
Fathima

Fathima

 இலங்கையில் உள்ள முஸ்லிம்கள் நடைமுறையில் உள்ள மிருகவதை சட்டத்தின் கீழ், அதனை விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஹஜ் கடமை காலத்தில் மதக்கடமையான குர்பான் கொடுத்தல் விஷயத்தில் ஆடு, மாடுகளை போக்குவரத்து செய்யும் விஷயத்தில் தற்போது, நடைமுறையில் உள்ள மிருகவதை சட்டத்தின் கீழ், அதனை விலக்கு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை வாழ் முஸ்லிம்கள் மிருகவதை சட்டம் தொடர்பில் விடுத்துள்ள கோரிக்கை | Request Made Regarding Animal Cruelty Act

நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி மற்றும் நக்கீப் மௌலானா ஆகியோர் பொலிஸ் மா அதிபர் விக்ரமரத்தினவைச் சந்தித்துள்ளனர்.

அதற்கமைவாக பொலிஸ் மா அதிபரின் கடிதம் ஊடாக, ஜூன் 29 திகதி வரை மாடுகளை போக்குவரத்துக்கு விலக்கு அளிக்கும் முகமாக பின்வரும், கடிதம் ஊடாக சகல பொலிஸ் நிலையங்களுக்கும், அறிவுறுத்தியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம் பௌசி தெரிவித்துள்ளார்.