IMF இலங்கைக்கு இரண்டு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை வழங்க இணக்கம்
சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துக்கு ஏறத்தாள இரண்டு பில்லியன் டொலருக்கும் அதிகமான தொகையை கொடுப்பதற்கான ஒரு ஒப்புதலை ஏற்கனவே வழங்கியுள்ளதாக ஈபிஆர்எல் அமைப்பின் தலைவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் ஊடகப் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழில் நேற்றையதினம்(29.09.2023) நடத்திய ஊடக சந்திப்பதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
''இலங்கையினுடைய வருமானம் செலவுகளுக்கிடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றது. முக்கியமாக சொல்வதாக இருந்தால் ஆரம்பத்தில் ஒரு சில கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
ரணில் விக்ரமசிங்க நாட்டினுடைய பொருளாதாரத்தினை மீள கொண்டு வந்து விடுவார் என்ற ஒரு விடயம் பரவலாக பேசப்பட்டது. அவர் பதவி ஏற்றவுடன் நம் நாட்டை வங்குரோத்து அடைந்த நாடு என்று அறிவித்தார்.
இந்நிலையில், வங்குரோத்து அடைந்த நாடு என்று அறிவித்ததன் காரணமாக கடன்களை கட்ட வேண்டிய தேவை இல்லை என்ற ஒரு நிலவரம் உருவானது.
கடன்களை காட்டாமல் இருந்ததன் காரணமாக வரக்கூடிய வருமானத்திலிருந்தே பெட்ரோல், டீசல் எரிபொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டன.'' என தெரிவித்துள்ளார்.