வாடகை வருமான வரி திட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக தகவல்
முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை கைவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக திறைசேரியின் பிரதி செயலாளர் ஆர்.எம்.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்தை மாற்றீடு செய்வதற்காக புதிய யோசனைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னைய அரசாங்கத்தின் யோசனையை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்காது.
மாற்று யோசனைகள்
சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மதிப்பாய்வில் சமர்ப்பிப்பதற்காக அரசாங்கம் பல மாற்று யோசனைகளை ஆராய்ந்து வருகிறது.
முன்னைய அரசாங்கம் முன்மொழிந்த வாடகை வருமான வரி திட்டத்திற்கு பதில் திறைசேரி அதிகாரிகள் பல மாற்று யோசனைகளை ஆராய்ந்து வருகின்றனர்.
அரசாங்கம் புதிய திட்டங்களை முன்வைக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது. சர்வதேச நாணய நிதியத்தின் அடுத்த மூன்றாவது மதிப்பாய்விற்கான திகதி இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |