மன்னாரில் சாதனை படைத்த சிறுநீரக சிகிச்சை பிரிவு

Mannar Sri Lanka Sri Lankan Peoples
By Fathima Aug 21, 2023 11:25 AM GMT
Fathima

Fathima

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அமைந்துள்ள சிறுநீரகச் சிகிச்சை பிரிவானது கடந்த ஐந்து வருடங்களாக சிறப்பாக இயங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வைத்தியர் சிசில் மற்றும் வைத்தியர் மல்ஷாவின் தலைமையின் கீழ் இயங்கிவரும், மன்னார் குருதி சிகிச்சை பிரிவில் தற்போது 60 சிறுநீரக நோயாளர்கள் சிறப்பான சிகிச்சையை பெற்று வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கிய 140 கிராமங்களை சேர்ந்த மக்களும் இதனால் பயனடைந்து வருகின்றனர்.

மரணங்களின் எண்ணிக்கை

இதனால் குறித்த சிகிச்சை பிரிவின் தரம் மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னாரில் சாதனை படைத்த சிறுநீரக சிகிச்சை பிரிவு | Renowned Urology Unit In Mannar

அத்துடன் சிறுநீரக பிரச்சினைகளால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் சடுதியாகக் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இவை தவிர்த்து பாம்பு கடி ,சலரோகம்,சிறுநீர் கிருமி தொற்று போன்றவற்றுக்கு சிகிச்சைக்காக வருகை தரும் அவசர நோயாளிகளுக்கான இரத்த சுத்திகரிப்பு சேவையையும் இங்கு மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.