கல்முனையில் டீ 100 திட்டத்தில் புனரமைக்கப்பட்ட மின்னொளி மைதானம்

Cricket Sri Lankan Peoples Eastern Province Sports
By Rakshana MA Apr 04, 2025 01:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்திற்கு நிரந்தரமாக மின்னொளி பொருத்தப்பட்டு நேற்று (03) உத்தியோகபூர்வமாக வீரர்களிடம் கையளித்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய விளையாட்டு கழகங்களினதும், வீரர்களினதும் நீண்ட கால தேவையாக இருந்து வந்த மின்னொளி வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானமொன்று இல்லாத குறையை நிவர்த்தி செய்யும் முகமாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸின் டீ- 100 திட்டத்தின் கீழ் இது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதி ஒதுக்கீடு சுமார் ஒரு கோடி அறுபது லட்சம் ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PTA-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

PTA-இன் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

உத்தியோகபூர்வ கையளிப்பு 

மின்னொளி மைதானம் உத்தியோகபூர்வமாக வீரர்களிடம் கையளித்து வைக்கும் நிகழ்வினை முன்னிட்டு மருதம் விளையாட்டுக் கழகம் மற்றும் கல்பனா விளையாட்டுக் கழகம் ஆகியவை இணைந்து உதைப்பந்தாட்ட போட்டி ஒன்றை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த போட்டியில் ஏறாவூர் யங் ஸ்டார் விளையாட்டு கழக உதைப்பந்து அணியினரும் மருதமுனை தெரிவு அணியினரும் போட்டியிட்டதுடன், வெற்றி தோல்வியின்றி சமநிலையில் நிறைவடைந்தது.

கல்முனையில் டீ 100 திட்டத்தில் புனரமைக்கப்பட்ட மின்னொளி மைதானம் | Renovated Illuminated Stadium In Kalmunai

இந்த போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், விளையாட்டுத் துறை முன்னாள் பிரதியமைச்சருமான எச்.எம்.எம் ஹரீஸ் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

மூன்று மாதங்களில் பதிவான மரணங்கள் தொடர்பில் பொலிஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

மூன்று மாதங்களில் பதிவான மரணங்கள் தொடர்பில் பொலிஸ் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியார்களுக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு

மட்டக்களப்பில் சுய தொழில் முயற்சியார்களுக்கான தையல் நிலையம் திறந்து வைப்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery