அம்பாறையில் வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம்

Ampara Eastern Province Kalmunai
By Laksi Jan 09, 2025 07:16 AM GMT
Laksi

Laksi

அம்பாறை- (Ampara) மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்பட்ட விளம்பர பெயர் பலகைகள் பல அகற்றப்பட்டு வருகின்றன.

சம்மாந்துறை சாய்ந்தமருது மாவடிப்பள்ளி காரைதீவு உள்ளிட்ட சில பகுதிகளின் விளம்பர பலகைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளன.

மேற்படி விளம்பர பலகைகள் சேதமடைந்த நிலையில் காணப்பட்டதுடன் தெளிவற்றதாக இடங்களின் பெயர்களும் கடந்த காலங்களில் காணப்பட்டதை ஆர்வலர்கள் சிலரால் சமூக ஊடகங்களில் வெளிக்காட்டப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

கிழக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுங்கள்: ஹிஸ்புல்லாஹ் எம்.பி கோரிக்கை

பொதுமக்கள் கோரிக்கை

இவ்வாறு பெயர் பலகைகள் திடிரென அகற்றப்பட்ட போதிலும் தற்காலிகமான எந்தவொரு ஏற்பாடும் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படவில்லை.

அம்பாறையில் வீதிகளின் பெயர் விளம்பர பலகைகள் அகற்றப்பட்டமையினால் சிரமம் | Removal Of Street Name Boards In Ampara

இதனால் வெளியிடங்களில் இருந்து அம்பாறை மாவட்டத்திற்கு சுற்றுலா வரும் பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே வீதி அபிவிருத்தி அதிகார சபை உடனடியாக இவ்விடயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: நலிந்த ஜயதிஸ்ஸ

சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: நலிந்த ஜயதிஸ்ஸ

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்

அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGalleryGalleryGalleryGallery