அரிசி இறக்குமதியில் பாரிய மோசடி: முன்னாள் அமைச்சர் பகிரங்கம்
அரிசி இறக்குமதியில் பல கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர (Mahinda Amaraweera) குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டில் பச்சை அரிசி வகைகளை இறக்குமதி செய்யும் போர்வையில் பெருமளவில் பாஸ்மதி அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுக்கு தெரிந்தே இந்த மோசடி இடம்பெறுகின்றது என்பது குறித்து சந்தேகம் எழுவதாக மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மோசடி
அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரிசி இறக்குமதி தொடர்பில் ஏற்கனவே இவ்வாறான குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் சுமத்தி வருகின்றது.
இதேவேளை, அரிசி மாபியாவின் தலைவராக அமைச்சர் வசந்த சமரசிங்க (Wasantha Samarasinghe) செயற்படுவதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில ( Udaya Gammanpila) குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |