புத்தளத்தில் உயிரிழந்த நிலையில் டொல்பின்கள் மீட்பு
புத்தளம் (Puttalam) - முள்ளிக்குளம் பகுதிக்குட்பட்ட வில்பத்து தேசிய பூங்கா கரையோரப் பகுதியில்11 டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதிங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த டொல்பின்கள் நேற்று (7) மாலை கரையொதிங்கியுள்ளது.
இந்த நிலையில் முள்ளிக்குளம் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் குறித்த டொல்பின்களை உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்வதற்காக மிருக வைத்தியரை வரவழைத்துள்ளனர்.
உடற்கூற்று பரிசோதனை
இதன்போது மிருக வைத்தியரினால் உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்போது வலையில் சிக்கிய நிலையில் உயிரிழந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பான தகவல்கள் நேற்று (07) புத்தளம் நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட உடல் உறுப்புகள் பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |