25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
'டிட்வா' சூறாவளியினால் பாதிக்கப்பட்டு, அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட இழப்பீட்டுத் திட்டத்திற்குத் தகுதியுடைய குடும்பங்களில் 87 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள் ஊடாக விநியோகிக்கப்படும் இந்த நிவாரணத் திட்டத்தின் கீழ், தகுதியுடையவர்களாக அடையாளம் காணப்பட்ட 450,225 குடும்பங்களில் 87.4 சதவீதமானோருக்குக் கொடுப்பனவுகள் வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.
குடும்பங்களுக்கான கொடுப்பனவு
மீதமுள்ள குடும்பங்களுக்கான கொடுப்பனவுகளை இன்று 31ஆம் திகதிக்குள் முழுமையாக நிறைவு செய்வதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, 50,000 ரூபா கொடுப்பனவுக்குத் தகுதியுடைய 153,593 குடும்பங்களில் 8.63 சதவீதமானோருக்கு உரிய கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளதை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.
அத்துடன், பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டத்தின் கீழ், 15,000 ரூபா கொடுப்பனவுக்குத் தகுதியுடைய 216,142 மாணவர்களில் 14.9 சதவீதமானோருக்கு முதற்கட்டமாக நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் இந்த நிவாரணப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.