சீன அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் நிவாரணம் வழங்கி வைப்பு
சீன (China) நாட்டு அரசாங்கத்தின் உதவியுடன் மட்டக்களப்பில் வெள்ளத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது மட்டக்களப்பு (Batticaloa) மாவட்ட செயலகத்தில் நேற்று (29) அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இந்த நிவாரண பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நிவாரணம்
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக சீனாவின் இலங்கைக்கான தூதுவர் குயி சிகங் ஹொங் கலந்து கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி வைத்துள்ளார்.
மாவட்டத்தில் முதல் கட்டமாக இதன்போது 100 பேருக்கு 6500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |