மக்கள் அனைவருக்கும் நிவாரணம் - ஜனாதிபதி அறிவிப்பு

Ranil Wickremesinghe Sri Lanka Sri Lankan Peoples President of Sri lanka
By Fathima Oct 14, 2023 12:11 PM GMT
Fathima

Fathima

மக்கள் அனைவருக்கும் நிவாரணம் வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பில் அரசாங்கம் அறிந்துள்ளது.

பொருளாதார பிரச்சினைகளை விரைவில் தீர்த்து அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

அத்துடன் கல்வி ஆய்வுகளுக்கான வரி விதிப்பு தொடர்பில் புதிய சுற்று நிரூபமொன்றை வெளியிடுவதற்கான இயலுமை தொடர்பில் ஆராய்ந்து, அடுத்த 3 வாரங்களுக்குள் தமக்கு அறிக்கையொன்றை சமர்பிக்குமாறு ஜனாதிபதி இதன்போது, அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.