ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு பணி நேரம் தளர்வு! பிஹார் அரசு அறிவிப்பு

Festival
By Fathima Mar 25, 2023 08:59 PM GMT

ரம்ஜான் மாதத்தை முன்னிட்டு முஸ்லிம் ஊழியர்களுக்கு பணி நேரத்தில் தளர்வு வழங்கப்படும் என பிஹார் அரசு அறிவித்துள்ளது.

இந்த மாதம் முழுவதும் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகை நடத்துவார்கள். இந்நிலையில், பிஹார் அரசு இது தொடர்பாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

ரம்ஜான் மாதத்தில் முஸ்லிம் ஊழியர்களுக்கு பணி நேரம் தளர்வு! பிஹார் அரசு அறிவிப்பு | Relaxation Time Muslim Employees During Ramadan

அதில், “ரம்ஜான் மாதம் முழுவதும் முஸ்லிம் அரசு ஊழியர்கள் பணிக்கு 1 மணி நேரம் தாமதமாக வரலாம். இதுபோல பணி நேரம் முடிவதற்கு 1 மணி நேரம் முன்னதாக வீட்டுக்குச் செல்லலாம்” என கூறப்பட்டுள்ளது.