கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு

Sri Lanka Sri Lankan Peoples Economy of Sri Lanka
By Laksi Oct 02, 2024 03:24 AM GMT
Laksi

Laksi

எரிபொருள் விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் கொள்கலன் போக்குவரத்து கட்டணங்களை குறைக்க தீர்மானித்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.

இதன்படி, நேற்று (01) நள்ளிரவு முதல் இந்த கட்டணங்கள் 4 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்ததால், ஒட்டோ டீசல் விலை 24 ரூபாவிலும் மற்றும் முன்பு 10 ரூபாவிலும் குறைக்கப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

கட்டணம் குறைப்பு

அந்த விலைகளுடன் ஒப்பிடுகையில், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை 4% குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் குறைப்பு | Reduction In Container Transport Charges

தற்போது ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் நிவாரணம் வழங்கும் பணிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, கொள்கலன் போக்குவரத்து கட்டணத்தை குறைக்க எமது செயற்குழு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படும் என அறிவிக்கும் நிலையில் தாம் இல்லை என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் தொழிற்சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.

தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சி

தேங்காய் எண்ணெய் தொழில் வீழ்ச்சி

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW