கைதிகளின் தண்டனை காலத்தை குறைக்க உத்தேசம்: விஜயதாஸ ராஜபக்ச

Dr Wijeyadasa Rajapakshe Department of Prisons Sri Lanka Prisons in Sri Lanka Prison
By Mayuri Jul 12, 2024 11:20 AM GMT
Mayuri

Mayuri

மரண தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு அவர்களின் நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனை காலத்தை குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு தண்டனையளிக்கப்பட்டுள்ளவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

நாடாளுமன்றத்தில் (12) ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன, இலங்கையின் சிறைச்சாலை கட்டமைப்பில் 13ஆயிரம் கைதிகள் மாத்திரம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் தற்போது 30 ஆயிரம் கைதிகள் உள்ளார்கள்.

மன்னிப்பு வழங்கி விடுதலை

சிறைச்சாலைகளில் 80 வயதை அண்மித்த சிரேஷ்ட பிரஜைகள் உள்ளனர். இவர்கள் உடல் மற்றும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். ஆகவே இவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கைதிகளின் தண்டனை காலத்தை குறைக்க உத்தேசம்: விஜயதாஸ ராஜபக்ச | Reduce The Sentences Of Prisoners

இதற்கு அவர் பதிலளிக்கையில், நீங்கள் குறிப்பிடும் இந்த பிரச்சினைக்கு கடந்த ஒன்றரை வருடகாலமாக தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகின்றோம். சிறைச்சாலைகளில் உள்ள வயது முதிர்ந்தோர், கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் மூன்று வைத்திய நிபுணர்களை உள்ளிடக்கிய குழு நியமிக்கப்பட்டது.

இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய தீர்மானம் எடுக்க எதிர்பார்க்கப்பட்டது. இந்த குழுவுக்கு முதல் கட்டமாக 100 சிறைக்கைதிகள் அனுப்பி வைக்கப்பட்டனர். இருப்பினும் இந்த குழு இரத்தசோகை நோயினால் பாதிக்கப்பட்ட கைதியை கூட விடுதலை செய்ய பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. இவ்வாறான நிலையில் அண்மையில் தண்டனை சட்டக் கோவையை திருத்தம் செய்தோம் என குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW