மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
மின்சார கட்டணம் 30 வீதத்தால் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
மேலும் இந்த கட்டண குறைப்பு எதிர்வரும் ஜூலை 18ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கட்டண குறைப்பு
முன்னதாக ஜூலை மாதம் 1ஆம் திகதி தொடக்கம் மின்சாரக் கட்டணங்களை குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekara) தெரிவித்திருந்தார்.
இதன்படி முதல் 30 அலகுகளின் விலைகளை 2 ரூபாவினாலும், 30 முதல் 60 அலகுகளின் விலை 11 ரூபாவினாலும், 60 முதல் 90 அலகுகளின் விலை 12 ரூபாவினாலும், 90 முதல் 180 அலகுகளின் வில 20 ரூபாவினாலும் குறைப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
இந்த கட்டண குறைப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு யோசனையை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |