நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

Sri Lanka Weather
By Raghav Jul 13, 2024 02:59 PM GMT
Raghav

Raghav

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி (Kandy)  மற்றும் நுவரெலியா (Nuwara Eliya)  மாவட்டங்களின் சில இடங்களில் 100 மில்லி மீற்றரிலும் அதிகரித்த மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதால் அப் பிரதேசங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  

மகாவலி அதிகார சபை 

கண்டியில் இன்று பிற்பகல் பெய்த பலத்த மழை காரணமாக கண்டி தொடருந்து நிலையம் மற்றும் போகம்பர பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை | Red Alert For Inclement Weather

கண்டி பொல்கொல்ல மகாவலி நீர்த்தேக்க அணையின் 04 கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை மகாவலி அதிகார சபை தெரிவித்துள்ளது.

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இடியுடன் கூடிய மழை,பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்கள் தொடர்பில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW