புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

Sri Lanka Police Puttalam Crime
By Rukshy Aug 25, 2024 02:29 AM GMT

புத்தளம், கற்பிட்டி - கப்பலடி கடற்கரைப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்தப் பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழையுடனான காலநிலை

நாட்டின் பல பகுதிகளில் தொடரும் மழையுடனான காலநிலை

மேலதிக விசாரணை

இதன்போது, 776 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 24 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு | Recovery Large Quantity Beedi Leaves In Puttalam

கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காகக் கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என்ற போர்வையில் பணம் வசூலிக்கும் மோசடிக் குழுக்கள்

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என்ற போர்வையில் பணம் வசூலிக்கும் மோசடிக் குழுக்கள்

யாழில் மின் மோட்டாரைத் திருத்த முற்பட்ட ஆலயப் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு

யாழில் மின் மோட்டாரைத் திருத்த முற்பட்ட ஆலயப் பணியாளர் ஒருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW